நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமையாகும் – இலங்கையின் ஏற்றுமதி சமூகம் வலியுறுத்து!

Thursday, July 14th, 2022

வேகமாக சிதைந்து வரும் இலங்கையின் அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தனது முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று இலங்கையின் ஏற்றுமதி சமூகம் கோரியுள்ளது.

நாட்டின் சமூக-பொருளாதார வீழ்ச்சியால், அத்தியாவசிய பொருட்கள், மருந்து, எரிபொருள் மற்றும் உள்நாட்டு எரிவாயு ஆகியவற்றுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவருக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார ரீதியில் சிறந்து விளங்கும் பிற நாடுகளில் இருந்து திட்டமிடப்பட்ட ஆதரவைப் பெறுவதற்கு நாட்டின் தற்போதைய நிலைமை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கையின் ஏற்றுமதி சமூகம் வலியுறுத்தியுள்ளது.

வணிகங்கள் குறைந்தபட்ச தாக்கத்துடன் செயல்படுவது இன்றியமையாததாக இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம், முதன்மையாக எரிபொருள் மற்றும் உள்நாட்டு எரிவாயு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையின் ஏற்றுமதி சமூகம் கோரியுள்ளது.

எனவே நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமையாகும் என்று இலங்கையின் ஏற்றுமதி சமூகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: