வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது வங்கி தரவுகளை சமர்பிக்க  நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, November 15th, 2016

மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் 14 வங்கிகளிடமிருந்து தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (15) கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இவர்களின் கோரிக்கைக்கு அமைய ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம் றியால் இன்று அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களின் விளக்கமறியலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் ஏ.எல்.எம் றியால் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணம் புங்குடுதீவில், மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Vidya_case

Related posts:

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியி...
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் - வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 665 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தக...