குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவடைவு – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா எச்சரிக்கை!

Saturday, January 6th, 2024


இலங்கையில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதே நிலை நீடித்தால், 2027ல் நாட்டின் மக்கள்தொகை 23.1 மில்லியனுக்கும் குறைவாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.

திருமண வயதை அடைந்த இளம் சமூகம் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல், திருமண வயதை அடைந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என தீர்மானித்தமை போன்ற காரணிகள் இதனை பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சனத்தொகையுடன் தொடர்புடைய வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 134 மில்லியனாக இருந்தாலும், இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் தொடர்ச்சியாகக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்,

கணிப்புத் தரவுகளின்படி, பிறப்புகளின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு 12 குழந்தைகளாகக் குறையலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

000

Related posts:


தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகபட்ச கடன் – அமைச்சர் நாமலின் யோசனைக்கு அமைச்சர...
பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் - தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத...
விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச...