பூஸ்டர் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது – உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022

பூஸ்டர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரயங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளொன்றில் மாரடைப்பினால் 450 பேர் வரையிலும், பக்கவாதத்தால் 100 முதல் 150 பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.

அத்துடன் இது கொரோனா நாட்டில் கண்டறியப்படுவதற்கு முன்னரே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதேநேரம் கொரோனா தடுப்பூசி மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுகின்றது என்பது விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியினை உரிய வகையில் பெற்றுக்கொள்ளுமாறும் விசேட வைத்தியர் பிரயங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முப்படைகள் மற்றும் போலிஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர் - டக்ளஸ் தேவானந்தாவின...
சீனி விலையை கட்டுப்படுத்த விரையில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
இந்திய முதலீட்டாளர்கள் குழு அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - நண்டு வளப்பில் வருமானத்தை அதிகரிக்கச் செய்யு...