இந்திய முதலீட்டாளர்கள் குழு அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – நண்டு வளப்பில் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் பொறிமுறை குறித்தும் ஆராய்வு!

Wednesday, April 24th, 2024

இந்திய முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பின்போது  இலங்கையில் நண்டு வளர்ப்புக்கு பொறுத்தமான இடங்களில் முதலீடுகளை செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கவது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக குறித்த தொழிலில் ஈடுபடுவோருக்கு வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஏது நிலைகள் கறித்தும் இதன்போது கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை மட்டக்களப்பு மற்றும் சிலாபம் மாவட்டங்களைச் சேர்ந்த இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் இறால் குஞ்சுகளை கடலிலிருந்து பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் நிலையங்களில் இருந்து போதுமான இறால் குஞ்சுகளை பெற்றுக் கொள்ளமுடியாமை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது நெக்டா நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: