மேல் மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கொரோனா தொற்று : சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!
Saturday, May 2nd, 2020
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார சேவைகள் பிரிவினர் மிகச் சிறப்பான முறையில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், மே 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாதுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்துடன் வெசாக் உற்சவ நாட்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அதனைத் தொடரந்து வரும் நாட்களும் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனையின் படி மக்கள் செயற்படுவது அவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெட்டியி குழியில் எலும்பு எச்சங்கள் - அதிர்ச்சியில் அச்சுவேலி!
பல்லாயிரம் பக்தர்களுடன் தேரேறி பவனி வந்தார் நல்லூர் கந்தன்!
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை - நீதிமன்றில...
|
|
|
யாழ் மாவட்டத்தில் அரிசி வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும் - கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை ...
கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்...


