ஐ.நாவின் தரப்படுத்தலில் இலங்கையும் இணைப்பு!

Saturday, August 11th, 2018

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயரும் அடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ. நா மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளின் பெயர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன் இஸ்ரேல், பாகிஸ்தான், ஓமான், மியன்மார், தாய்லாந்து, துருக்கி, பஹ்ரைன், ஈராக், தென் சூடான், தஜிகிஸ்தான், டர்க்மோனியா, உஸ்பெகிஸ்தான், மெக்ஸிகோ, அல்ஜெரியா, எரித்திரியா, ஹொன்டுராஸ், மொரக்கோ, சூடான் போன்ற நாடுகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts: