புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 3ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் !
Thursday, October 20th, 2016
தற்போது வெளிவந்துள்ள தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாமென கல்வி அமைச்சின் பாடசாலைகள் அலுவல்களுக்கு பொறப்பான பணிப்பாளர்று.மு.ஆ. விஜேயதுங்க தெரிவித்தார்.
இதனிடையே விண்ணப்பங்களை அடுத்த மாதம் 3ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டள்ளதுடன் ஒரு மாணவர் பத்து பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்ட விண்ணப்பங்களை பயன்படுத்துவது கட்டாயமானது எனவும் சந்தையில் விற்பனை செய்யப்படும் மாதிரி விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கும் விண்ணப்பங்களின் தகவல்களை கணனி மயப்படுத்தி வெட்டுப் புள்ளிகளை வெளியிட மூன்று வார காலமாவது செல்லுமென திரு. விஜயதுங்க தெரிவித்தார். எவ்வாறேனும் உரிய மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் புதிய பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


