புதிய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டெம்பரில் நடத்தப்படும்?
Saturday, February 24th, 2018
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்துள்ளார்.
தற்போது கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த கட்ட மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
மேலும் புதிய முறையிலேயே மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நேற்றும் 30 பேருக்கு கொரோனா தொற்று: இனங்காணப்பட்ட நோயாளர்களில் 22 பேர் கடற்படையினர் – இராணுவத் தளபதி...
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள்
வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக குறுஞ் செய்தி!
|
|
|


