நேற்றும் 30 பேருக்கு கொரோனா தொற்று: இனங்காணப்பட்ட நோயாளர்களில் 22 பேர் கடற்படையினர் – இராணுவத் தளபதி!

Thursday, April 30th, 2020

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரேனா நோயாளிகள் 30 பேரில் 22 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் கடற்படை சிப்பாய்கள் 20 பேர் வெலிசர கடற்படை முகாமிலும் ஏனைய அதிகாரிகள் இருவர் விடுமுறைக்கு சென்றவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய்களுடன் நெருக்கமாக செயற்பட்ட 7 பேர் எனவும் ஒருவர் குணசிங்கபுர பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நபர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமிற்கு வெளியே பதிவாகிய நோயாளிகள், பதுளை, தலாத்துஓய, ஹோகந்தர மொரொன்துடுவ மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது அமுலுக்கு வருகிறது. இருந்தாலும் இயன்றளவு விரைவில் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம் என தெரிவித்த அவர் அரச புலனாய்வுத் துறையினரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரை பிடித்து வருகிறோம். ஏனெனில் தொற்றுக்குள்ளானவர்கள் பலர் அவர்களுடன் பழகியவர்கள் விபரங்களை மறைப்பதால் இப்படி நடக்கின்றன. இயன்றளவில் நாங்கள் நிலைமைகளை கட்டுப்படுத்தி வருகிறோம். ஊரடங்கு சட்டத்தை நீடிக்கவே மக்கள் கோருகிறார்கள். நிலைமைகளை பார்த்து சரியான முடிவை அரசு எடுக்கும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: