புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்து!
Wednesday, August 19th, 2020
அரச மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகளில் பயணிகள் நிம்மதியாகவும், விரைவாகவும் பயணம் செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதுவதுடன் வாகன நெரிசலை குறைப்பதற்கான புதிய திட்டங்களை போக்குவரத்து அமைச்சு தயாரித்து அதனை துரிதமாக செயற்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கினால் ஏன் நட்டமேற்படப்போகின்றது என்று கெள்வி எழுப்பியுள்ளார்.
மிகச் சிறியதோர் ஆரம்பத்திலிருந்து பெரிய மாற்றத்தினை செய்ய முடியும். பேருற்துகளை கழுவி சுத்தம் செய்து பிரயாணிகளுக்கு பயணிப்பதற்கான ஒழுங்குகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தியுள்ளதுடன் அனைத்து துறைகளினதும் அபிவிருத்தியை மிகச் சிறிய இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் போக்குவரத்து அமைச்சர் மற்றும் புகையிரத பெட்டிகள் , மோட்டார் வாகன உற்பத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் போக்குவரத்து சேவை அதிகாரிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் மோட்டார் வாகனத்தில் வந்து அதனை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு பேருந்து ஊடாக சேவை நிலையங்களுக்கு செல்லும் தரித்தல் – பயணம் முறைமையை உடனடியாக செயற்படுத்த வேண்டும். இதனால் வாகன நெரிசல் எதிர்பார்க்கும் அளவிற்கு குறைவடையும் என்பதுடன் இலங்கை போக்குவரத்து சேவை பயணிகளுக்கு சிறந்த சேவையினை வழங்கினால் அந்நிறுவனம் ஒருபோதும் நட்டமடையாது. அத்துடன் கிராமிய புறங்களில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகளை தேவைக்கேற்ப சேவையில் ஈடுப்படுத்துவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


