அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது!

Thursday, January 20th, 2022

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம் எந்தவொரு அரச உத்தியோகத்தரும் 55 வயதிற்குப் பின்னர் விரும்பினால் ஓய்வுபெறலாம் எனவும் 65 வயதிற்குப் பின்னரே ஓய்வுபெற வேண்டும் எனவும் புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: