தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு வடக்கு ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, February 6th, 2019

வடக்கு மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  பணித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும் கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்.

அதற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தினை வடக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான wwwற.np.gov.lk  இல் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 0212231343 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கு மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய நடுத்தர மற்றும் சிறிய விளம்பரப் பதாகைகளில் அவை காட்சிப்படுத்துவதற்காக அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட போது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இணைத்துக்கொள்ளாத காட்சிப் பலகைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:

2019 இல் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் -மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்ச...
பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கையால் ஏற்...