பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றுக்கு 6000 ரூபாவிற்கு அதிகம் செலவு – தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் நாளாந்தம் 1000 பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை – தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் தெரிவிப்பு!

Friday, April 24th, 2020

ஒருவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றதா என அடையாளம் காணும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு 6000 ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுவதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதன் பமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பரிசோதனைகளுக்கு தனியார் வைத்தியசாலைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதோடு நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார் தெரிவிக்கப்படுள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில் அதன் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பரிசோதனைகள் இலங்கையில் குறைவான அளவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலதரப்பட்டவர்களிடமிருந்தும் குரல்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையிலேயே தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதன் பமரவீர குறித்த கருத்தை வெளியிட்டுள்ளதுடன் பரிசோதனைகளையும் அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: