இன்று ஆரம்பமாகும் ஆசிய ஒத்துழைப்பு மாநாடு!
Saturday, October 8th, 2016
ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று தாய்லாந்தில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள உள்ளார்.
. 34 நாடுகளின் பங்களிப்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ம் திகதி வரை இடம்பெற உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, உணவு பாதுகாப்பு, நீர் மற்றும் மின்சக்தி, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட 20 விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

Related posts:
அரியாலை அ.த.க பாடசாலை மூடப்படும் அபாய கட்டத்தில் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
நேற்று அடையாளம் காணப்பட்ட 31 கொரோனா நோயாளிகளில் 21 பேர் கடற்படையினர் - சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசி...
இன்று உலக நீர்வெறுப்பு நோய் தினம் இன்று!
|
|
|


