வறுமைக்கோட்டின் கீழுள்ள 37 ஆயிரத்து 500 முன்பள்ளிச் சிறார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா நிவாரணம் – ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, February 4th, 2023

நாட்டில் 37,500 சிறுவர்கள் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா முன்பள்ளிக் கட்டணக் கொடுப்பனவாக வழங்கப்படும் என ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் சந்திரலால் பிரேமகுமார தெரிவித்தார்.

இந்நாட்டில் முன்பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் அதிகள வில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அந்தக் குழுவில், முன்பள்ளி பெற்றோர் குழுக்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட கடினமான பொருளாதார நிலைமைகளைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு உலக வங்கி உதவியின் அடிப்படையில் மாதம் ஆயிரம் ரூபா வீதம் நிவாரணம் வழங்கப்படும்.

ஒரு முன்பள்ளியிலிருந்து அதிகபட்சமாக ஐந்து பிள்ளைகள் தெரிவு செய்யப்படுவார்கள் என ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளர் சந்திரலால் பிரேமகுமார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: