பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்க உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சிறு நிதியில் பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான “வில் கிளப்” நிகழ்வு!
 Monday, March 4th, 2024
        
                    Monday, March 4th, 2024
            
சிறு நிதியில் தமது பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான “சேர்ச் போர் காமன் கிரௌண்ட்” நிறுவனத்தினால் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளுக்கான “வில் கிளப்” நிகழ்வானது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது .
குறித்த நிறுவனத்தினால் உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளுக்காக வழங்கப்பட்ட சிறு நிதியில் அவர்கள் தமது பிரதேசங்களில் செய்த செயற்றிட்டங்கள் தொடர்பான அறிக்கைகளும் அதனுடைய அடைவுகள், சவால்கள் மற்றும் அரச பங்குதாரர்கள் வழங்கிய உதவிகள் போன்றன கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் வில் கிளப்பிற்கான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதனை பதிவு செய்தல் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் சேர்ச் போர் நிறுவன உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தினர், ஊடகவியலாளர்கள், என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        