சந்தையில் அகற்றும் கழிவுகள் வீதியில் – பிரதேச சபையினர் மீது மக்கள் விசனம்!

Thursday, May 10th, 2018

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி சந்தையில் தேங்கும் கழிவுகளை அகற்றும் பிரதேச சபை ஊழியர்கள் வீதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் பிரதேச சபை கழிவகற்றல் பிரிவினர் திருநெல்வேலி சந்தையில் உள்ள கழிவுகளை உழவு இயந்திரத்தில் அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்கின்றனர்.

உரிய முறையில் கழிவுகளை வண்டியில் ஏற்றாது சுகாதாரமற்ற முறையில் கழிவுகளை கொண்டு செல்கின்றனர். இதனால் குறித்த பகுதி மற்றும் பிரதான வீதிகளில் குறித்த உழவு இயந்திரத்தில் இருந்து கழிவுகள் வீதியில் கொட்டுகின்றன.

இதனால் கழிவுகள் விழுந்துள்ள இடங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

திருநெல்வேலி பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் பலமுறை இந்த விடயத்தை பிரதேச சபை ஊழியர்களுக்கு சுட்டிக்காட்டிய போதும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உரிய முறையில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தாத முறையில் கழிவகற்றலை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:

வடமாகாணத்திலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் துறை மாவட்ட அலுவலகங்களுக்குப் புதிய உதவிப் பணிப்பாளர்கள் நி...
பாடசாலைகளில் தைப்பொங்கல் விழாவை மார்கழியில் கொண்டாடுவது கவலையளிக்கிறது - வடமாகாண ஆசிரியர் ஆலோசகர் சங...
இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது - சந்திரயான் 3 வெற...