இலங்கையின் நெருக்கடி நிலை – 13 மில்லியன் குரோன்களை உதவியாக வழங்குகிறது நோர்வே அரசு!

Wednesday, August 3rd, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் போஷாக்கு நெருக்கடி குறித்து நோர்வே கவலை கொண்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் என்னிகன் குய்ட்ஃபெல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடி கடுமையான மனிதாபிமான சூழ்நிலை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தநிலையில் கடுமையான தேவைகளை நிவர்த்தி செய்ய நோர்வே 13 மில்லியன் குரோனை வழங்குவதாக கூறியுள்ளார்.

விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வரும் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பதில் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட உலக உணவுத் திட்டத்திற்கு 5 மில்லியன் குரோன்களையும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்கும் சனத்தொகை அமைப்புக்கும் 8 மில்லியன் குரோன்களையும் நோர்வே வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் என்னிகன் குய்ட்ஃபெல்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கும் நோர்வே முன்னுரிமை அளிக்கிறது என்றும்அ வர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: