ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி!

Saturday, April 15th, 2017

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையினால் அங்கு வாழும் மக்கள் குறித்து அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தியுள்ளது.

அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கும் அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்காகவும் அனர்த்தத்திற்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி முப்படையினர் பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்தைப் பார்வையிடச் செல்வதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு பிரதேச மக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்விடத்தைப் பார்வையிடச் செல்வது அங்குள்ள மக்களுக்குத் தொந்தரவாக அமையும் என்பதால் அப்பிரதேசத்தைப் பார்வையிடச் செல்வதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: