இன்று உலக சுற்றாடல் தினம் !

Sunday, June 5th, 2016
இன்று உலக சுற்றாடல் தினமாகும். வனவிலங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்பதே இம்முறை உலக சுற்றாடல் தினத்தின் தொனிப் பொருள் ஆகும்.

1972 ஆம் ஆண்டு சுவீடனில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய ஜீன் 5 ஆம் திகதி  உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) மாத்தளை எட்வட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதற்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சுற்றாடல் வாரத்தை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சூழல் மற்றும் மஹாவலி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ஏ.ஆர்.ஆர்.ரூபசிங்ஹ தெரிவித்துள்ளார்.

துரிதமாக அதிகரித்து வரும் உலக சனத்தொகை காரணமாக இயற்கை வளநுகர்வு அதிகரித்து வருகின்றது. வரையறுக்கப்பட்ட வளங்கள் அதிகமாக நுகரப்படுவதனால் எதிர்காலத்தில் மிக விரைவில் மனிதனுக்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். வளங்களை சிக்கனமாக பயன்படுத்தல், வீண்விரயங்களை தடுத்தல் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை இலகுவாக காணலாம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: