ஐந்து பேர் கொண்ட குழுவினர் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி!
Wednesday, August 31st, 2016
கிளிநொச்சி உதயநகர் கிழக்கில் கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் கொண்ட குழுவினரால் தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் அடங்கிய குழுவினர் உதயநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த 42 வயதான அருணாசலம் கதிரமலை என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !
நியாயமான விலைக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச...
தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்த விவகாரம் - சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத...
|
|
|


