பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!
Thursday, October 18th, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கான சுற்றுவட்டம் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவின் கையொப்பத்துடன் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுறும் வரையில் அவரை பதவி இடைநிறுத்தம் செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
யாழ்.மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இன்று பொறுப்பேற்பு!
சமுர்த்தி உள்ளிட்ட மானியங்களுக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு - நலப்பணிகள் திணைக்களம் அறிவிப்பு!
உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
|
|
|


