வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 30 000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் – தொழில்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 16th, 2021

கொரோனா அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் பொது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் நிர்க்கதியான நிலையிலள்ள மேலும் 20 ஆயிரம் பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ள தொழில்துறை அமைச்சர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரை தனிமைப்படுத்துவதற்கான, போதிய இடவசதிகள் இன்மை காரணமாக, அந்த செயற்பாடுகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டள்ளார்.

அதேநேரம் குறித்த பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக, சகல மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு விருந்தகமும், தங்குமிட விடுதியையும் அமைக்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: