நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு – வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா எச்சரிக்கை!

Monday, October 16th, 2023

நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் பதின்ம வயதினர் என ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் சுட்டிக்காடியுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா மேலும் தெரிவித்தார்.

குழந்தை பருவ வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தின் போதே தாய் – சேய் குடும்ப சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பதின்ம வயதினரிடையே ஏற்படும் தனிமை , மனக் குழப்பங்கள், மன அழுத்தங்கள், எரிச்சல்கள் மற்றும் கோபங்கள் போன்ற செயற்பாடுகளினால் ஏற்படும் மனநல பாதிப்பின் உச்சகட்டமே தற்கொலை போன்ற நிலைமைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: