செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பம்!

Sunday, May 15th, 2016

வடக்கு – கிழக்கு – ஊவா ஆகிய 03 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய ஏழுமாவட்டங்களை இணைக்கும் 56 நாட்கள் 572 கி.மீற்றர் தூரம் கொண்ட இலங்கையின்மிக நீண்ட கதிர்காமப் பாத யாத்திரை வேல்சாமி தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது.

இன்று மே மாதம் 15ம் திகதி யாழ். செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் வேல்சாமி தலைமையிலான இலங்கையின் நீண்ட பாதயாத்திரைக் குழுவினர் மே மாதம் 23ல் முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலயத்தை சென்றடைவர்.

அங்கிருந்து கொக்கிளாய், புல்மோட்டை ஊடாக மே31ல் திருகோணமலையைச் சென்றடைந்து வெருகல் மட்டக்களப்பூடாக யூன் மாதம் 15ம் திகதி தாந்தாமலையை அடைவர். பின்னர் பழுகாமம், மண்டுர் பெரியகல்லாறு ஊடாக யூன் 20ல் காரைதீவைச் சென்றடைவர்.

அங்கிருந்து அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவிலூடாக யூன் 29ம் திகதி உகந்தைமலை முருகன் ஆலயத்தை அடைவார்கள். பின்னர் யாலகாட்டுப் பாதைக்குள் பிரவேசித்து குமுக்கன், நாலடி வியாழை, கட்டகாமம், வீரச்சோலை செல்லக்கதிர்காமம் ஊடாக யூலை 05ம் திகதி கதிர்காமத்தைச் சென்றடைவார்கள்.

மூவின மக்களும் பேதமின்றி தரிசிக்கும் புனித பூமியாம் கதிர்காமத்திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் யூலை 05ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி யூலை 21ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்த ஆடிவேல் விழாவையொட்டி இடம்பெறும் பாத யாத்திரை என்பது மிகவும்முக்கியமாகக் கருதப்படுகிறது. வருடமொன்றுக்கு யால காட்டினூடாக சராசரி 40 ஆயிரம்முதல் 50 ஆயிரம் அடியார்கள் வரை நடந்து கதிர்காமத்திற்கு சென்று வருவதுண்டு.

யுத்தம் நிலவிய காலப் பகுதியிலும் கூட பாதுகாப்புக் கெடுபிடிகள் பதிவுகள்மத்தியிலும் அடியார்கள் சென்று வந்திருந்தனர். 90வீதமானோர் உகந்தைமலைமுருகன் ஆலயத்திலிருந்துதான் காட்டினுடாக இப்பாத யாத்திரையை மேற்கொள்வது வழமை.

10 வீதமானோர் மட்டுமே நாடு நகரங்களினுடாகவும் பிரதான வீதிகளினூடாகவும்பயணிப்பர். அங்கிருந்து குமண பறவைகள் சரணாலயம் வாகூரவட்டை ஊடாக கூமுனை, குமுக்கன் ஆற்றை அடைந்து அங்கிருந்து அடர்ந்த காட்டுக்குள்ளால் நாவலடிமடு, வியாழை, வள்ளியம்மன் ஆறு, கட்டகாமம் ஊடாக கதிர்காமத்தைச் சென்றடைவதுவழமை.

காட்டிற்குள் ஆறு அல்லது ஏழு தினங்கள் பாதயாத்திரையினர் தங்கியிருப்பர்.சுமார் 80கிலோமீற்றர் காட்டிற்குள் அவர்கள் பயணித்து கதிர்காமத்தை 05ம்திகதியளவில் அடைவார்கள். கொடியேற்றம் 05ம் திகதி. அதனைக் கண்டு அவர்கள்பாத யாத்திரையை நிறைவு செய்வார்கள்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து90வீதமான அடியார்கள் பாத யாத்திரையில் ஈடுபடுவார்கள். எனினும் மேல் தென்மாகாணங்களிலிருந்தும் அடியார்கள் நடந்து வருவதுண்டு.

இதைத்தவிர வெருகல், மாமாங்கம் மண்டூர் என்று தலங்களிலிருந்து செல்லும்பாத யாத்திரைக் குழுவினருமுள்ளனர். சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினரும்யாத்திரையில் ஈடுபடுவது வழமை. அமைப்பு ரீதியாகவும் கூட்டம் கூட்டமாகவும்சிறு குழுக்களாகவும் ஜோடியாகவும் தனியாகவும் இப்பாத யாத்திரையை அடியார்கள்மேற்கொள்வதுண்டு.

எனினும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் 56 நாட்கள் கொண்ட வேல்சாமி தலைமையிலான பாத யாத்திரைதான் இலங்கையில் நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகிறது. பாத யாத்திரைக்கான நிகழ்ச்சிநிரல் வெளியிடப்பட்டுள்ளது. பங்கேற்பவர்கள் கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் அதில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளன.

பாடசாலை செல்லும் மாணவர்கள் கலந்து கொள்ள முடியாது. ஆண்கள் மேலங்கி அணியக் கூடாது.வேட்டி அணிதல் கட்டாயமாகும். பெண்கள்சேலைஅணிதல் அவசியமாகும்.இலங்கையின் எந்தப் பாகத்திலுள்ளோரும் பாத யாத்திரையில் பங்கேற்கலாம். ஆனால் பாதயாத்திரை ஆரம்பமாக முன்னர் தொடர்புகொண்டு பதிவுசெய்து கொள்ள வேண்டும். மேலதிக தொடர்புகளுக்கு வேல்சாமிமகேஸ்வரன்-0773483437 <0773483437> என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: