பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கான சுற்றுவட்டம் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவின் கையொப்பத்துடன் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுறும் வரையில் அவரை பதவி இடைநிறுத்தம் செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
மாகாண சபை தேர்தல்: மகிந்த விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
கொரோனா தொற்று: போலி மருந்துகள் சந்தையில்: எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 30 000 இலங்கை பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் - தொழ...
|
|