பிரதமர் ரணில் இந்தியா விஜயம்!
Tuesday, November 21st, 2017
எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணமாகவுள்ளார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு புதுடில்லி செல்லும் பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு முக்கிய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
இந்தியா செல்லும் பிரதமர் இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் பொருளாதார வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடவுள்ளார். எட்கா உடன்படிக்கை தொடர்பாகவும் பேச்சவார்த்தைகள் இடம்பெறவுள்ளது. பிரதமரின் இவ்விஜயத்தில் மங்கள சமரவீர மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர்குழுவினரும் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கபப்டுகின்றது.
Related posts:
சீரற்ற காலநிலையால் இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் !
கப்பலில் தீப்பரவல் - சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவ...
11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் - வெளியானது விசேட வர்த்தமானி!
|
|
|


