பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பாப்பரசரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறாது – பிரதமர் ஊடகப் பிரிவு அறிவிப்பு!
Thursday, September 9th, 2021
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமரின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகையில் –
இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் இத்தாலியின் பொலோக்னாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எந்த நிலையிலும், பரிசுத்த பாப்பரசரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் செய்வதற்கு பிரதமர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும், பிரதமருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலோக்னாவில் நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் இத்தாலியிலிருந்து வெளியேறுவார்கள் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


