இலங்கைவைத்தியர்கள்11000 பேர் லண்டனில் பணிபுரியும்போது இந்திய மருத்துவர்கள் இங்கு வர முடியாதா?

Thursday, July 28th, 2016

இலங்கையின் வைத்தியர்கள் 11 ஆயிரம் பேர் லண்டனில் பணிபுரிகின்றனர். அப்படியாயின் ஏன் வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இலங்கையில் பணிபுரிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் –

இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதாவது இவ்வாறு எட்கா உடன்டிபடிக்கை கைச்சாத்திடப்படுவதால் இந்திய வைத்தியர்கள் இலங்கைக்கு வந்துவிடுவார்கள் எனகூறுகின்றனர். ஆனால் ஒருவிடயத்தை இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் வைத்தியர்கள் 11 ஆயிரம் பேர் லண்டனில் பணிபுரிகின்றனர். அப்படியாயின் ஏன் வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இலங்கையில் பணிபுரிய முடியாது என்று நான் கேள்வி எழுப்புகின்றேன். இலங்கை மருத்துவர்கள் வெளிநாடுகளில் பணி புரியலாம்.ஆனால் வெளிநாட்டு மருத்துவர்கள் இலங்கையில் பணிபுரிய முடியாதாம். என்ன நியாயம் என்று எனக்கு விளங்கவில்லை.

இவர்கள் இப்படித்தான் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை கொண்டுவரப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்காரணமாக எனது உடலில் மூன்று குண்டுகள் இன்னும் இருக்கின்றன. அவற்றை வெளியில் எடுக்க முடியாது. அவ்வாறு நாங்கள் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கா பாடுபட்டோம்.  ஆனால் அன்று அதனை எதிர்த்தவர்கள் பின்னர் அந்த மாகாண சபையில் அங்கத்துவம் வகித்தனர். அதுமட்டுமன்றி மாகாண சபையை ஆட்சியை தீர்மானிப்பதது தாங்கள் தான் என மார்த்தட்டிக்கொண்டனர். இவர்கள் போன்றவர்களின் செயற்பாடுகளே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் தடையாக இருக்கின்றன என்றார்.

Related posts: