தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான புதிய அலுவலகம்!

Wednesday, January 4th, 2017

பத்தரமுல்ல ‘சுஹுறுபாய’ 8ம் மாடியில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையத்தினால் ‘இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலைய பாதுகாப்பு மீளாய்வு 2017’ எனும் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் முக்கிய நோக்கம் புரிந்துணர்வு மற்றும் பகுப்பாய்வு, தேசிய, பிராந்திய, சர்வதேச பாதுகாப்பு மற்றும் பூகோள அரசியல் போன்றவற்றின் புரிந்துணர்வினை அதிகரிப்பதற்காக முன்னுரிமை அளித்தல் என்பனவாகும். இந்த அறிக்கையின் முதற் பிரதி பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சிக்கு நிலையத்தின் பணிப்பாளரினால் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சிற்காக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் முதற்தர தேசிய பாதுகாப்பு சிந்தனை குழுவாக இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த கற்கை நிலையத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான  www.insssl.lk ஆனது பாதுகாப்பு செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த புதிய தேசிய பாதுகாப்பிற்கான சிந்தனைக் குழுவினால் தேசிய மற்றும் சர்வதேச போக்குகளுக்கமைய ஆய்வு பல முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இந்த நிலையம், அரச, தனியார்துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மை என்பவற்றை பாதிக்கும் காரணிகள் தொடர்பாக விவாதிக்கவும் கலந்துரையாடவும் தளம் அமைத்துக்கொடுக்கவுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2df5856577e2502c5d4c462f46c00ee9_XL

Related posts:

அமரர் கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை!
கொரோனா தொற்றுக் காரணமாக தொழிலை இழந்த வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு விசேட காப்புறுதித...
டிசம்பர் மாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெ...