பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய வேண்டும் எனவும், பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வருடங்களில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 7.5 மில்லியனாக அதிகரிப்பதற்கு சுற்றுலாத் துறையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை ஹோட்டல் சங்கத்தின் 58 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்டத்தரணிகள் சங்கத்தில் புதிய மாற்றம்!
புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்பாட்டல்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - சுகாதார அமைச்சு!
|
|