கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Monday, September 7th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 123ஆக அதிகரித்துள்ளது.

கொரொனா தொற்றுக்கு உள்ளான இருவர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 186 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதோடு, இந்த தொற்றிலிருந்து இதுவரையில், 2 ஆயிரத்து 925 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 57 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கையில் இதுவரையில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 221 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: