பாதிக்கப்பட்ட வீடுகள் உடனடியாக புனரமைக்கப்படும் -ஜனாதிபதி!

Sunday, May 28th, 2017

நாட்டில் நிலவிவரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகள் உடனடியாக புனரமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கான் உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்து கொண்டு நாட்டை வந்தடைந்துள்ள ஜனாதிபதி, அனர்த்த பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையின் காரணமாக நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 பேர்வரை உயிரிழந்துள்ளதுடன், நூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அனர்த்தத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வீடுகள் முழுமையாகவோ, பகுதியளவிலோ கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், சுமார் 2 இலட்சம் பேர்வரை தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேறி தற்காலிக இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக புனரமைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts: