சார்க் மாநாடு நடைபெறுமா?

Wednesday, September 28th, 2016

 

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் இடம்பெறவுற்ற சார்க் மாநாட்டில் இந்தியபிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப் போவதில்லை என இந்தியா நேற்று அறிவித்துள்ளது.

இந்திய இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மிகப்பெரியதாக்குதலை நடத்தினர். இதன் காரணமாக 18 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இவ்வாறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதனால் ஆப்கானிஸ்தான், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னரே தாம் சார்க்மாநாட்டில் பங்குகொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்தன.

இந்த நாடுகளில் எவையேனும் பங்கேற்காவிட்டால் இந்த மாநாடு இடம்பெறசாத்தியமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாடு நிறுவிய 30 வருடத்தில் இந்தியா இதில் பங்கேற்கப் போவதில்லை எனகுறிப்பிடுவது இதுவே முதன் முறையாகும்.

1985ம் ஆண்டு சார்க் மாநாடானது ஆரம்பிக்கப்பட்டது.சார்க் மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களதேஷ், இலங்கை, பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த 19வது உச்சி மாநாடு பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் நவம்பர் மாதம் 9ம்திகதி மற்றும் 10ம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

173370890522

Related posts: