வனவள பாதுகாப்பு அமைச்சின் 3 சுற்றறிக்கைகள் இரத்து – மாவட்ட மற்றும் பிரதேச செயலாளருக்கான அதிகாரங்களுடன் வெளியானது சுற்றறிக்கை!

Sunday, August 15th, 2021

வனவள பாதுகாப்பு அமைச்சின் 3 சுற்றறிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அதன் அதிகாரங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்ட வனவள பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்று சுற்றறிக்கைகள் இரத்து செய்யப்பட்டு வனாந்திரம் ஆக்கப்படும் பகுதிகள் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என புதிய சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது.

2021.08.06 காணி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

MWFC/1/2020-20201104 சுற்றறிக்கை மூலம் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினால் வழங்கப்பட்ட 05/98-1998.07.01 சுற்றறிக்கை, 05/2021-2021.08.10 சுற்றறிக்கை, சுற்றுச்சூழல் அமைச்சினால் வழங்கப்பட்ட 02/2006-2006.05.17 சுற்றறிக்கைகள் இதன் மூலம் இரத்து செய்யப்படுகின்றன.

அத்துடன் காணி அபிவிருத்தி சட்டத்தின் பிரிவு 8 இன் பிரகாரம் காணி ஆணையாளர் ஜெனரலின் சாதாரண அல்லது விசேட ஏற்பாடுகளின் பிரகாரம் பிரதேச செயலாளரினால் அரசு நிலங்கள் 15 ஐ பல்வேறு காரணங்களுக்காக நிலம் ஒதுக்கப்படலாம்.

இதேநேரம் வனப்பாதுகாப்பு ஜெனரல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஜெனரல் ஆகியோரால் வர்த்தமானி பயிடப்பட்ட நிலங்களைத் தவிர ஏனைய அடையாளப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் காடுகள் பிரதேச செயலாளரினான் கட்டுப்பாட்டில் உள்ளடக்கப்படுகிறது.

அத்துடன் வனாந்திரமாக ஒதுக்கப்படவேண்டிய நிலங்கள் தொடர்பில் ஆராய்ந்து வர்த்தமானி பிரசுரிப்பதற்கு பிரதேச செயலாளரின் அனுமதி  பெறப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ,நிலப் பகிர்ந்தளிப்பு ஆகியவற்றை மாவட்ட செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பிரதேச செயலாளரினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முடியும் எனவும் புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: