மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

Sunday, April 9th, 2017

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுமார் 100 க்கும் அதிகமான சுகாதார சங்கங்களுடன் இணைந்து நேற்று நாடு முழுவதும் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் காரணமாக நோயாளர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்து கிராமிய ஆஸ்பத்திரிகள், தள வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அவசர நோயாளர் சேவைகள் மட்டும் ஆங்காங்கே நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியர்களின் போராட்டம் காரணமாக பெரும் எண்ணிக்கையான நோயாளர்களால் நிரம்பி வழியும் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நேற்று வழமைக்கும் மாறாக வெறிச்சோடிக் காணப்பட்டது.

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பில் ஏற்கனவே அறிந்திராத நோயாளர்கள் ஏமாற்றத்துடன் நேற்று வீடு செல்ல நேரிட்டது. அத்துடன் தூர இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

” எனது பேரனுக்கு கடும் காய்ச்சல். இன்று வைத்தியர்கள் வேலைநிறுத்தம் செய்வது தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை.நாம் காலை 10 மணிக்கு வந்தோம். மகனுக்கு இந்த நிலைமையில் எமக்கு மீண்டும் வீட்டுக்குப்போக பயமாக இருக்கிறது.எனவே நாம் தனியார் வைத்தியசாலைக்கு செல்லவுள்ளோம்.” என தேசிய வைத்தியசாலைக்கு வந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

வைத்தியர்கள் இல்லாமையினால் வைத்தியசாலையில் கடமையிலிருந்த தாதியர்களும் உதவியாளர்களும் நோயளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

“அவசர நிலமையிலுள்ள நோயாளர்களை நாம் அனுமதிக்கின்றோம். பலரும் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் பற்றி அறியாமல் வருகின்றார்கள். ” என தாதியொருவர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் அன்றைய தினம் சோதனைக்காக வருமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஓரிரு நோயாளர்களை மட்டு​ேம காணக்குடியதாக இருந்தது.

மாளிகாவத்தை பகுதியிலிருந்து வந்திருந்த பெண் ஒருவர் தெரிவிக்ைகயில், வைத்தியர்கள் இல்லையென்று தெரிந்திருந்தும் அடுத்த சோதனைக்கான திகதியைப் பெற்றுக்ெகாள்வதற்காக சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்பதாக கூறினார்.

இதேவேளை, SAITM நிறுவனத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மருதானை மற்றும் புறக்ேகாட்டை, கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related posts:

பொதுத் தேர்தலை நடத்த சாதகமான ஏதுநிலைகள் இல்லை - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!
எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் நாடளாவிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் மாற்றம் - சுகாதார சேவைகள் பணி...
முதலாவது கொரோனா அலையின் போது 7 வீதமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் - மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்...