பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்தும் என்டிஜன் பரிசோதனை – பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண!
Friday, February 5th, 2021
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 16 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக கடந்த அக்டோபர் 30 ஆம் திகதிமுதல் இதுவரையிலும் 2997 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலை போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிளிநொச்சி பொலிஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரல்!
துணிந்து செயற்பட அதிகாரிகள் தயக்கம் - யாழ் மாவட்டச் செயலாளர் !
மின் உற்பத்திக்காக 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


