கிளிநொச்சி பொலிஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரல்!

Saturday, April 9th, 2016

கிளிநொச்சி ஊடகவியலாளரின் அச்சுறுத்தல் முறைப்பாட்டை ஏற்காத பொலீஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட விடயம் தொடர்பில்  செய்தி சேகரிச்சென்ற   ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரின் முறைப்பாட்டை  ஏற்றுக்கொள்ளாத கிளிநொச்சி பொலீஸாரிடம் இலங்கை மனித ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம்  1996 ஆம் ஆண்டு 21 இலக்கம் மனித உரிமைகள் சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைவாக சொந்த பிரேரணையாக குறித்த சம்பவத்தினை ஏற்றுக்கொண்டு கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சர் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (08) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம்  விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது எனவும்  சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுப்பட்டவர்களால் ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பொலீஸார் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளதா விடயம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Related posts: