யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்ளனர் – யாழ் மாவட்டச் செயலகம் தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 2078 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் 02.09.2020 தொடக்கம் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட 2078 பட்டதாரி பயிலுனர்களுள் இதுவரை 1859 பேர் இதுவரையான காலப்பகுதிக்குள் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர் என யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக  யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 106 பயிலுனர்களும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 243 பயிலுனர்களும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 173 பயிலுனர்களும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 52 பயிலுனர்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 165 பயிலுனர்களும், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 208 பயிலுனர்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 281 பயிலுனர்களும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 218 பயிலுனர்களும், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 15பயிலுனர்களும், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 138 பயிலுனர்களும், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 152 பயிலுனர்களும், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 45 பயிலுனர்களும், வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 37 பயிலுனர்களும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 6 பயிலுனர்களும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 20 பயிலுனர்களுமாக மொத்தமாக 1859 பேர் இதுவரையான காலப்பகுதிக்குள் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர் எனவும் யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: