ஓட்டிசம் நோயாளர்களைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும்

Friday, April 28th, 2017

நாட்டிலுள்ள ஓட்டிசம் நோயாளர்களைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தவேண்டுமென்று சுகாதாரம் போஷாக்கு  மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

சுகாதார கல்வி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பிரதியமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இவ்வாறான நோய்க்கு உள்ளான பிள்ளைகளுடன் பெற்றோர் கூடுதல் நேரத்தை செலவிடுவது முக்கியமாகும் என்றும் சுகாதார பிரதியமைச்சர் கூறினார்.

ஒட்டிசம் நோயாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கு தனியார் பிரிவைப் போன்று அரசாங்க துறையினரையும் தெளிவுபடுத்த வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் ஓரங்கட்டக்கூடாது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார கருத்து வெளியிடுகையில், இந்த நோய்க்கான சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையமொன்று முல்லேரியாவில் அமைக்கப்படுமென்று தெரிவித்தார்

Related posts: