பாடசாலை புத்தகங்களுக்கும் வவுச்சர் !
Friday, September 29th, 2017
எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களுக்கும் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க ஆராய்ந்துவருவதாக அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாடப்புத்தகங்களை அச்சிடுகையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுவதுடன் குறிப்பாக இதனால் அதிக செலவுகள் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கு மாற்றீடாக வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்குவது குறித்து எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...
முன்னெப்போதும் இல்லாத சவாலை இன்றைய இளைஞர் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ளனர் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெ...
உலக தமிழர் பேரவை போன்று புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் - அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின...
|
|
|


