அமெரிக்க உயர்மட்ட தூதர், ஜனாதிபதி சந்திப்பு – பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Wednesday, October 26th, 2022

அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தும் இலங்கையின் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசியல் விருப்பமும் வலுவான நடவடிக்கைகளும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்பதாக அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் நேற்று நாட்டை வந்தடைந்தார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அரசாங்கப் பிரதிநிதிகளையும் பொருளாதாரத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான முன்னோக்கி செல்லும் வழியை மையமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திண...
வார இறுதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு - மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன...
நிர்மாணத் துறையில் ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக...