கடன் தொடர்பில் பிரதமர் கருத்து!

Saturday, July 15th, 2017

இலங்கை எதிர்வரும் 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவை கடனாக செலுத்தவேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளதுவரட்சியால் விவாசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து, வெள்ளத்தால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 0.5 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோய்த் தொற்று காரணமாக சுற்றுலாத்துறையிலும் பாதிப்பு ஏற்படலாம்.

இவ்வாறான நிலைமைகளில், 2020 ஆம் ஆண்டளவில் சமநிலைத் தன்மையை ஏற்படுத்தி 2025 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைக்கு வரலாம் என பிரதமர் கூறியுள்ளார்

Related posts: