யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள்!

Saturday, July 17th, 2021

யாழ்ப்பாணத்தில் 33 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடம், யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகளிலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 524 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், யாழ். போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 5 பேருக் கும், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவருக்கும், யாழ். மாநகர மருத்துவ அதிகாரி பிரிவு, சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவு, உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவு, பருத்தித்துறை ஆதார மருத்துவமனை ஆகியவற்றில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது.

இதேபோன்று, பூநகரி மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை யில் ஒருவருக்கும், கரைச்சி மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குமென 4 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதேபோன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 266 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்குமாக வடக்கில் 10 பேருக்கும் தொற்று உறுதிப்

படுத்தப்பட்டது. இதேவேளை, பூந்தோட்டம் தனிமைப் படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதுதவிர, நேற்று பருத்தித்துறையில் மேற்கொள்ளப் பட்ட அன்டிஜென் பரிசோதனையில் நால்வர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்

Related posts:


மார்ச் மாதம் வரை மழை இல்லை: மூன்று மாதங்களுக்கே குடிநீரை விநியோகிக்க முடியும் - நீர் வழங்கல் வடிகாலம...
மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படவுள்ளதால் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்க பெரும் சிக்கல்களை எதிர்...
கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் பிரச்சினை - உர இறக்குமதியில் தாமதம் என தேசிய உர செயலகம் தெ...