முன்னெப்போதும் இல்லாத சவாலை இன்றைய இளைஞர் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ளனர் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Sunday, June 18th, 2023தற்போது இளைஞர் சமூகத்தினர் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட சிரமங்களைப் போன்றதொரு நிலைமையை இளைஞர் சமூகம் எதிர்நோக்கி வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடி நிலைமைக்கு வெற்றிகரமான தீர்வுகளை வழங்கி, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இளைஞர் யுவதிகள் விடுபடுவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெல்லியடி வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்!
இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக யாழ்ப்பாணம் வருகை!
|
|
|


