பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
Saturday, July 29th, 2023
அடுத்த (2024) ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளது.
தற்சமயம் ஆரம்பமாகியுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசலைகளின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் ஒகஸ்ட் 17 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒகஸ்ட் 18 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 27 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு மட்டுமே பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்டப் பாடசாலை தவணை ஒகஸ்ட் 28 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நடைபெறுமென்றும், மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விளையாட்டுத் துறையினூடாகவே நற்குணங்களை வளர்த்தெடுக்க முடியும் - ஐங்கரன்.
அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரி...
அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல - ரமேஷ் பத்திரனவிற்கு கைத்தொழ...
|
|
|


