மட்டக்களப்பில் 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு- மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Sunday, June 6th, 2021

நாடு பூராகவும் கொவிட் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பாதிப்புக்குள்ளான 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற சுமார் 78 ஆயிரத்து 584 குடும்பங்களுக்கும், முதியோர் கொடுப்பனவை பெற்று வருகின்ற 996 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 79 ஆயிரத்து 580 குடும்பங்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் குறித்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த கொடுப்பனவானது பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலின் படி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு!
வவுனியா விபத்தில் மரணித்த இளைஞருக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் நாட...
இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார...