பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 22nd, 2018

பஸ் கட்டணத்தை 12.5 வீதத்தால் அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவிலிருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எனினும் இந்த அதிகரிப்பைஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

இதன் காரணமாக 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும் போக்குவரத்து அமைச்சு இணக்கம்தெரிவித்திருந்தது.

அதன்படி குறித்த கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டதை அடுத்து அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts:

அன்பளிப்பு பொருள்கள் பெறுவதை அரச ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் - இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழ...
நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலனும் - ஈ.பி.டி.பியின் சுவிஸ் பிராந்திய விஷேட கலந்துரையாடல்!
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்ட...