பல்கலைக்கழகங்கில் இந்து மதத்திற்கு மட்டுமே தனியான பீடம் கிடையாது – பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை !

Monday, February 20th, 2017

இலங்கைப் பல்க்கலைக்கழகங்களில் இந்து மதத்திற்கு மட்டுமே தனியான பீடம் இல்லை மற்றைய மதங்களுக்கு தனியான பீடம் உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்து மதத்துக்கு மட்டுமே தனியான பீடம் கிடையாது. பௌத்த சமயத்தைப் பார்த்தால் பௌத்த பிக்குகள் படிப்பதற்கென்றும், பௌத்தம் படிப்பதற்கென்றும் அவர்களுக்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் அவர்கள் கற்பதற்கான பீடங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கும் பீடம் இருக்கின்றது. ஆனால் இந்து சமயத்திற்கென்று இதுவரை பீடமில்லை நாங்களும் உரியவர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றோம். எங்களுடைய சமயத்தை சரியாக வழிநடத்தக் கூடியவை ஆலயங்கள், ஆனால் இன்று எமது இளைஞர்கள் ஆலயம் சென்று வழிபடுவது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. இப்பொழுது எந்தப் பத்திரிகை எடுத்தாலும் கோயில் உண்டியலுடைப்பு, அம்மன் சிலை திருட்டு எனதான் செய்திக் வெளியாகின்றன. எமது இந்து மதம் ஏன் இவ்வாறானவற்றுக்குள் செல்கிறது என்று பார்க்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்குத்தான் இருக்கின்றது. எமது சமயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்றார்.

8749

Related posts: